Latestமலேசியா

மித்ராவின் ‘Celik MADANI’ திட்டம் அறிமுகம்: 5,000 இந்தியக் குழந்தைகளுக்குக் கல்வி மானியம்

புத்ராஜெயா, மே-2,

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இந்தியக் குழந்தைகளுக்கு தரமான, உள்ளடக்கிய மற்றும் சமமான பாலர் பள்ளிக் கல்வி கிடைப்பதை உறுதிச் செய்யும் வகையில் ‘Celik MADANI’ எனும் புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

அவ்வகையில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 4 முதல் 6 வயதுடைய 5,000 இந்தியக் குழந்தைகளுக்கு கல்வி மானியம் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் மொத்தம் 2,530 ரிங்கிட் வரையிலான கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

இதில் மாதம் 150 ரிங்கிட் வரையிலான பாலர் பள்ளிக் கட்டணம் மற்றும் 80 ரிங்கிட் வரையிலான காலை உணவு மானியம் ஆகியவை அடங்கும்.

இத்தொகை நேரடியாகத் தகுதிபெற்ற பாலர் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக மொத்தம் 12.65 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் பெற்றோர்கள், வரும் மே 20-ஆம் தேதிக்குள், திரையில் காணும் QR குறியீட்டை scan செய்து மித்ரா இணைய அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இன்றே விண்ணப்பியுங்கள்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!