Latestமலேசியாவிளையாட்டு

மீண்டு வந்த ஸ்குவாஷ் ராணி: Grasshopper பட்டத்தைத் தட்டிச் சென்றார் சிவசங்கரி

சூரிக், ஏப்ரல்-27-தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி சுவிட்சர்லாந்தில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

​சூரிக் நகரில் நடைபெற்ற 2026 Grasshopper கிண்ண இறுதியாட்டத்தில், ஜப்பானின் சத்தோமி வத்தானாபேவை எதிர்கொண்டார் சிவசங்கரி.

5 செட்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 15-13, 5-11, 5-11, 11-7, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் சிவசங்கரி வெற்றிப் பெற்றார்.

முதல் 3 செட்கள் முடிவில் 2-1 என தோல்வியின் விளிம்பில் இருந்தபோதிலும், தனது அபாரமான மனவலிமையால் அடுத்த 2 செட்களைள்ளும் மீண்டும் தன்வசப்படுத்தினார் கெடாவைச் சேர்ந்த இந்த நட்சத்திர வீராங்கனை.

சுமார் 62 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டம், அவரது அபாரத் திறமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், எகிப்தின் அமினா ஓர்ஃபியை வீழ்த்த 81 நிமிடங்கள் போராடிய சிவசங்கரி, சற்றும் சளைக்காமல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.

வத்தனாபேவுக்கு எதிராக அவர் பெற்ற 7-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

​வெற்றியாளர் பட்டம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள சிவசங்கரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!