
புத்ராஜெயா, ஏப்ரல்-19-தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-பின் கீழ் செயல்படுத்தப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டமான முத்ரா (MUDRA) திட்டத்திற்கு, இவ்வாண்டு 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டின் 160 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை விட, 60 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகும் என அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
KUSKOP-பின் கடனுதவித் திட்டங்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பே, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கக் காரணம் என்றார் அவர்.
இந்தியச் சமூகத்தினரிடையே சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (MSME) ஊக்குவிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்நிதி 5 முக்கிய அரசு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும்:
SPUMI திட்டத்திற்கு தெக்குன் நேஷனல் (TEKUN) வாயிலாக RM120 மில்லியன், வணிகம் திட்டத்திற்கு SME வங்கி வழங்கும் RM50 மில்லியன், பேங்க் ரக்யாட் வழங்கும் RM15 மில்லியனும் அதிலடங்கும்.
எஞ்சிய நிதி AIM மற்றும் SKM ஆகிய அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் சொன்னார்.
மார்ச் இறுதி வரை, 1,800-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு 33 மில்லியன் ரிங்கிட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வணிகங்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பதை உறுதிங் செய்வதே இதன் நோக்கமாகும் என ஸ்டீவன் சிம் கூறினார்.



