Latestஇந்தியாஉலகம்

மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்

புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார்.

மகனின் நோயை குணப்படுத்தும் நோக்கில், ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 35 வயது மாது இந்தக் கொடூரச் செயலில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

மகளின் உடலில் பெண் தெய்வம் புகுந்திருப்பதாகவும், அந்த தெய்வத்தை குளிர வைக்கும் வகையில் கன்னிப் பெண்ணை நரபலி கொடுப்பதே, மகனின் நோய்த்தீர்க்கும் என்றும் அந்த பெண் மந்திரவாதி கூறியுள்ளார்.

இதனை நம்பிய தாய், தனது கள்ளக் காதலன் மற்றும் அந்த மந்திரவாதியுடன் சேர்ந்து அஸ்தமி இரவில் நரபலிக்கு ஏற்பாடு செய்தார்.

சம்பவத்தின் போது மகளின் கைகளை தாயும் அவரின் காதலனும் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொள்ள, மந்திரவாதி ஒரு சிறிய மரக்கட்டையை எடுத்து அந்த இளம் பெண்ணின் பிறப்புறுப்பில் அழுத்தினார்; போதாக்குறைக்கு, உடனிருந்த ஆடவர் அப்பெண்ணின் தலையில் பலமாக அடித்து, இரத்தைத் வழிபாட்டுக்கு எடுத்துக்கொண்டாராம்.

நரக வேதனையை அனுபவித்து அந்த இளம் பெண் மரணமடைந்த நிலையில், அவரின் உடலைத் வீட்டுத் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டனர்.

எனினும் மறுநாளே, உடல் கண்டுபிடிக்கப்பட்டு, போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கிய போது விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையின் போது, மகளை யாரோ கற்பழித்துத் கொன்று விட்டதாகவும் தாய் நாடகமாடியுள்ளார்.

எனினும், சவப்பரிசோதனையிலும் தடயவியல் அறிக்கையிலும் இது நிரூபிக்கப்படவில்லை.

தாய், அவரின் கள்ளக் காதலன், பெண் மந்திரவாதி மூவரும் கைதுச் செய்யப்பட்டு கொலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பிள்ளையைக் காப்பாற்ற, மூடநம்பிக்யை நம்பி இன்னொருப் பிள்ளையை தாயே நரபலி கொடுத்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!