Latestஉலகம்

மெக்கா மசூதியில் ஒழுக்கக்கேடான செயல் எனக் குற்றச்சாட்டு; இரு வங்காளதேசிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத், அக்டோபர்-21,சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு வங்காளதேச பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் அனைத்துலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nazrul Islam Abdul Basi என்ற ஆடவருக்கும் Siti Akhtar என்ற பெண்ணுக்கும் அக்டோபர் 14-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இருவரும் மசூதியில் முத்தமிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவினாலும், அந்தக் குற்றச்சாட்டு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தின் முழு விவரங்களையும் சவூதி அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்நிலையில், தனது பிரஜைகளுக்கான மரண தண்டனை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாததற்கு வங்காளதேச அரசாங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாகச் சவூதி அரேபியாவிடம், டாக்கா அதிகாரப்பூர்வ விளக்கமும் கோரியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம், நீதிமன்ற விசாரணையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

உலகில், மரண தண்டனையை அதிகளவில் நிறைவேற்றும் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான Human Rights Watch வெளியிட்ட தகவலின்படி, கடந்தாண்டு மட்டும் சவூதியில் குறைந்தது 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் வன்முறையற்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையே மத நிந்தனைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரான அனோஜன் சிவராசாவின் தண்டனையை, இலங்கை அரசின் தொடர் தூதரக முயற்சிகளுக்குப் பிறகு சவூதி உச்ச நீதிமன்றம் அண்மையில் இரத்துச் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!