தெமர்லோ, மே-15, பஹாங், மெந்தகாப்பில் இரு இராணுவ வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில், இருவருமே காயமடைந்திருக்கின்றனர்.
மே 9-ஆம் தேதி இரவு Batu 3 இராணுவ முகாமில் அச்சண்டை நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது 36 வயது இராணுவ வீரர் தனதறையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்; அப்போது வெளியில் மோட்டார் சைக்கிளை start செய்த 38 வயது நபர், அதிக இரைச்சலோடு என்ஜினை இயக்கியுள்ளார்.
இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் வெளியில் வந்து கடிந்துக் கொள்ள, இருவருக்கும் சண்டை மூண்டது.
ஒருவர் கட்டையைத் தூக்க இன்னொருவர் பாராங் கத்தியுடன் பாய இருவருக்குமே அதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாராங் கத்தியால் வெட்டுப் பட்டவருக்கு சில தையல்களும் போடப்பட்டன.
Sergeant நிலையிலான அவ்விரு இராணுவ வீரர்களிடமும் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதை பஹாங் மாநில போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்.
மோசமான காயங்கள் விளைவித்ததன் பேரில் குற்றவியல் சட்டத்தின் 326-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.