Latestமலேசியா

யூசோஃப் ராவுத்தரை கண்காணித்து வருகிறது இண்டர்போல்

புத்ராஜெயா, செப்-08-அரசியல்வாதி ஒருவரின் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளரான Muhammad Yusoff Rawtherருக்கு மேல்முறையீட்டு அறிவிப்பை வழங்குவதற்காக, அவரை Interpol தேடி வருவதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் இரண்டு போலி கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில், தற்காப்பு வாதத்தை முன்வைக்காமலேயே Yusoffவை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

Yusoffபின் இருப்பிடத்தைக் கண்டறிய ஜூலை 22ஆம் தேதி Manchesterரில் உள்ள Interpol தேசிய மைய அலுவலகத்திடம் (NCB) கோரிக்கை விடுக்கப்பட்டதாக துணை அரசு வழக்கறிஞர் Mohd Asnawi Abu Hanipah தெரிவித்தார். Interpol கூடுதல் தகவல்களைக் கோரியிருந்தது. இருப்பினும் இதுவரை Yusoffபின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவருக்கு அறிவிப்பை வழங்கும் முயற்சி வெற்றியடையவில்லை என்றும் Mohd Asnawi கூறினார்.

இதற்கிடையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CPC) பிரிவு 314-ன் கீழ் மேல்முறையீடு மற்றும் விசாரணை குறித்த அறிவிப்புகளை எதிர்வாதிக்கு நேரடியாக வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வாதிட்டது. Yusoff, Zoom வழியாக விசாரணையில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் நேரில் ஆஜராகுதல் அவசியம் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி Datuk Azman Abdullah வலியுறுத்தினார்.

இந்நிலையில், தனது கட்சிக்காரரின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், CPC பிரிவு 314-ஐப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகவும் Yusoffபின் வழக்கறிஞர் Muhammad Rafique Rashid Ali தெரிவித்தார். அதனை அடுத்து, அறிவிப்பை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிப்பதற்காக வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. Yusoff, மனித உரிமைகள் தொடர்பான புகலிடக் கோரிக்கையைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இங்கிலாந்தில் வசித்து வருவதாக அவரது வழக்கறிஞர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!