
கோலாலம்பூர், மே 19 – NSM எனப்படும் கடற்படைத் தாக்குதல் ஏவுகணை கொள்முதல் உடன்பாடு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நார்வே பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையைக் மலேசியா கோரியுள்ளது.
உடன்பாடு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, மலேசியா அதன் மதிப்பில் 95 விழுக்காடு €126 மில்லியன் Euro அல்லது(583 மில்லியன் ரிங்கிட் ) தொகையைச் செலுத்தியிருந்ததாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் Khalid Nordin ) கூறினார்.
ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான கோங்ஸ்பெர்க் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸின் (Kongsberg Defence & Aerospace ) தகவலின்டி , ஆறு புதிய கடலோரப் போர்க் கப்பல்களுக்கு ஆயுதம் வழங்குவதற்காக இந்த NSM கொள்முதல் ஒப்பந்தம் ஏப்ரல் 2018-ல் கையெழுத்தானது.
நேற்று நார்வே நிறுவனத்திற்கு ஒரு அறிவிப்பை அனுப்பினோம். நேரடி மற்றும் மறைமுக செலவுகள் இரண்டையும் நாங்கள் கோருகிறோம் என்று காலிட் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
நேரடி செலவு €126 மில்லியன் இரோ ஆகும், இது நாங்கள் ஏற்கனவே அவர்களுக்கு செலுத்திய தொகையாகும் என்று பேரா, லுமுட்டில் உள்ள கடற்படை தளத்திற்கு சென்றபோது அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி மலேசியா ஆர்டர் செய்திருந்த NSM-க்கான ஏற்றுமதி அனுமதியை நார்வே அரசாங்கம் ரத்து செய்தது.
அதன் பாதுகாப்பு தொழில்நுட்ப ஏற்றுமதிகள் அதன் நண்பர்கள் மற்றும் நெருங்கிய பங்காளிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படும் என்று அது கூறியது.
ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் மாறிவரும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, NSM அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுகணை அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்ததாக நார்வேயின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நார்வேயின் முடிவை பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த வாரம் விமர்சித்ததோடு , மலேசியா சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



