
மோஸ்கோ, அக்டோபர்-7 – ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள plague ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய 28 வயது பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Darya Shipilova, செப்டம்பர் 30-ஆம் தேதி வேலையிடத்தில் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகவும், 2 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் _pneumonic plague_ நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்துடன் அவரது மரணம் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
Pneumonic plague என்பது Yersinia pestis என்ற பாக்டீரியா கிருமியால் ஏற்படும் கடுமையான தொற்றுநோயாகும்.
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், antiobiotics தடுப்பு மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இந்நிலையில், ஊடகச் செய்திகளை ரஷ்ய அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மாறாக, Shipilova-வின் மரணத்திற்குக் காரணம் _“காரணம் கண்டறியப்படாத நிமோனியா”_ என மட்டுமே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் பணியாற்றிய நோய்க்கிருமிகளால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் ரஷ்ய சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனமான WHO நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
என்றாலும், ரஷ்யாவுக்கு வெளியே இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய தற்போதைய ஆபத்து மிகவும் குறைவு என அது கூறுகிறது.



