Latestமலேசியா

ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை

ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை

சிரம்பான், பிப்ரவரி-18,

வெறும் RM70 பெறுமானமுள்ள ரொட்டி சானாய் மற்றும் பானங்களுக்கு RM120 ரிங்கிட் வரை கட்டணமாக வசூலித்ததாக ஒரு வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் பேரில், சிரம்பானில் உள்ள ஓர் உணவகம் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

கூடுதலாக RM50 வசூலித்ததற்கான காரணத்தை விளக்கக் கோரி, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் நெகிரி செம்பிலான் கிளை அந்த உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3 மேசைகளில் தனது கூட்டாளிகளுடன் அமர்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவு மற்றும் பானங்களின் விலைகளை எப்படி கணக்கிட்டாலும் 70 ரிங்கிட்டைத் தாண்டாது; எனவே மீண்டும் கணக்குப் பார்க்குமாறு புகார்தாரர் உணவகப் பணியாளர்களைக் கேட்டுள்ளார்.

அதற்கே ஒரு மணி நேரம் காக்க வேண்டியிருந்ததாக, வைரலான வீடியோவில் அவ்வாடவர் கூறினார்.

_”ரொட்டி சானாய்க்கு 120 ரிங்கிட்டா? என் பணத்தைத் திருப்பித் தாருங்கள். இப்படி மிகையான கட்டணத்தால் என்னை நெரிக்காதீர்கள்”_ என அவர் சத்தம் போடுவதை காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!