
குவாந்தான், ஜூலை-16-பஹாங், குவாந்தானில் ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதற்காக கார்ப்பரல் பதவியில் உள்ள போக்குவரத்து காவல் வீரருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதை அடுத்து, 42 வயதான Ahmad Amin Khairul Kumar குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நான்கு மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், இன்று முதல் அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
2017 அக்டோபர் 3 ஆம் தேதிக்கும் 2018 மார்ச் 2 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தனிநபரிடமிருந்து தனது மனைவியின் கணக்கிற்கு இணையவழி பணப் பரிமாற்றம் மூலம் RM1,000 பெற்றதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்குமாறு முன்னதாகக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான குற்றம் சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்ததுடன், அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM10,000 பிணைத் தொகை விதித்தது. கடப்பிதழை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.



