Latestமலேசியா

லிப்பிஸ் – பெந்தா சாலையில் காரும் டுரியான் லோரியும் மோதிய விபத்தில் இருவர் மரணம்

லிப்பிஸ், ஜூன் 17 – Benta சாலைப் போக்குவரத்துத் துறைக்கு அருகே , ஜாலான் லிப்பிஸ்-பெந்தா சாலையின் 18 ஆவது கிலோமீட்டரில் டுரியான் பழங்களை ஏற்றிச் சென்ற லோரியுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு மணி 9.30க்கு நடந்த இந்த சம்பவத்தில் , நால்வர் சென்ற காரும், கிளந்தானுக்கு டுரியான் பழங்களை ஏற்றிக் கொண்டு விநியோகிக்கச்சென்று கொண்டிருந்த லோரியும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan இஸ்மாயில் மான் (Ismail Man) தெரிவித்தார்.

கிளந்தானிலிருந்து அக்காரை ஓட்டிய உள்நாட்டைச் சேர்ந்த Ng See Jou என்ற ஆடவரும் காரில் இருந்த அடையாளம் தெரியாத சீனாவைச் சேர்ந்த பிரஜையும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர்.

அந்த கார் சம்பவம் நடந்த இடத்தில் எதிர்திசையில் நுழைந்ததால் லோரியுடன் நேருக்கு நேர் மோதியது.

லோரி ஓட்டுனரும் சீனாவைச் சேர்ந்த இதர இரண்டு சீனப் பயணிகளும் சிகிச்சைக்காக லிப்பிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இஸ்மாயில் மான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!