Latestமலேசியா

வங்சா மாஜூவில் மண் சரிவு; பாதுகாப்புக் கருதி மக்கள் வெளியேற்றம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் -23, கோலாலம்பூர், வங்சா மாஜூ, Jalan Genting Klang அருகே நேற்று மாலை பெய்த கனமழையால், Taman Bunga Raya-வில் உள்ள ஒரு வீடு மண்சரிவால் பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்புத் துறை வந்து பார்த்த போது, அவ்வீட்டையொட்டிய மலையோரப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

அவ்வீட்டின் பின்பகுதியில் மண் சரிந்து சாலையின் கால்வாசி பகுதியை மூடியிருந்ததை வைரலான புகைப்படங்களில் காண முடிந்தது.

என்றாலும் அதில் எவரும் காயமடையவில்லை.

இருந்த போதிலும் சில குடியிருப்பாளர்கள் தத்தம் வீடுகளை காலிச் செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அங்கு இன்னமும் மண் நகர்வு காணப்படுவதால், பாதுகாப்புக் கருதி அவர்கள் வேளியேற கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மண் சரிந்த பகுதியில் நிலைமைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!