
பட்டவொர்த், ஆகஸ்ட்-17- ஆடவர்கள் கும்பலொன்று சாலையில் கலவரத்தில் ஈடுபடும் வைரல் வீடியோ தொடர்பில் பினாங்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆடவர் செய்த போலீஸ் புகாரை அடுத்து விசாரணைத் தொடங்கியுள்ளது.
சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவச் சென்ற போது அவ்வாடவர் தாக்கப்பட்டார்.
விழுந்துகிடந்த மோட்டார் சைச்கிளோட்டி எழுந்து உதவ வந்தவரை முகத்தில் குத்த, வழிப்போக்கர்கள் சிலரும் சண்டையில் குதித்தனர்.
அவர் சரமாரியாகத் எட்டி உததைக்கப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீஸை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.