கோம்பாக், மே 2 – கோம்பாக்கில் Taman Bukit Rawang Jaya- வில் ஒரு மீட்டர் ஆழத்திலுள்ள கால்வாயில் விழுந்ததால் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து 4 கிலோமீட்டருக்கு அப்பால் அந்த சிறுவனின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கண்டுப்பிடித்தனர். அந்த துயரச் சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 5.28 அளவில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Muktar தெரிவித்தார். Rawangகைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு தீயணைப்பு வீரர்கள் தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட பின் அந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.