Latestமலேசியா

வீட்டில் தொடங்கி சாதனைப் புத்தகம் வரை: போஷினி தேவியின் டும் டும் மெட்ரிமோனியின் வெற்றிப் பயணம்

கோலாலம்பூர் -வாட்சப் வழியாக வீட்டிலிருந்தே தொடங்கிய சிறிய முயற்சி, இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அந்தப் பயணத்துக்குச் சொந்தக்காரர் Dum Dum Matrimony நிறுவனத்தின் நிறுவனர் போஷினி தேவி.

2020-ஆம் ஆண்டு திருமணத் தகவல்களைப் பகிரும் சேவையாக அவர் தொடங்கிய முயற்சி, 2023-ஆம் ஆண்டு இணையத்தளமாகவும், 2025-ஆம் ஆண்டு செயலியாகவும் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. தற்போது நாட்டின் மிகப்பெரிய இந்தியத் திருமணத் தகவல் தளமாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சிப் பயணத்தில், அவரது கணவரும் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநருமான டி. சத்தியவர்மன் பக்கபலமாக இருந்து வருகிறார். இருவரின் கூட்டு முயற்சியில், வீட்டிலிருந்து செயல்பட்ட சேவை, முறையான நிர்வாகக் கட்டமைப்பும் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டிருப்பதாகவும், ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற உதவியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள் மட்டுமின்றி, விவாகரத்தானவர்கள் மற்றும் துணையை இழந்தவர்களும் இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக நிறுவனம் கூறுகிறது.

வீட்டிலிருந்து தொடங்கிய முயற்சியை ஆறு ஆண்டுகளில் மலேசிய சாதனைப் புத்தகம் வரை கொண்டு சென்றுள்ள போஷினி தேவியின் நிறுவனம், தற்போது கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸில் செயல்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!