Latestமலேசியா

2027 பட்ஜெட்: 11,000 பராமரிப்பாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி; பினாங்கு, சரவாக்கில் புதிய ஒருங்கிணைந்த மையங்கள்

கோலாலாம்பூர், அக்டோபர்-14,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பை குடும்பங்களின் சுமையாக மட்டும் கருதாமல், நாடு தழுவிய சேவையாக விரிவுபடுத்தும் 2027 பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வரவேற்பு தெரிவித்துள்ளது.

தரமான சமூகப் பராமரிப்பை உறுதிச் செய்ய பயிற்சி பெற்ற பணியாளர்கள் அவசியம் எனவும், அதற்கான வலுவான கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி கூறினார்.

மனித மேம்பாட்டுக் கழகமான HRD Corp வாயிலாக RM40 மில்லியனுக்கும் அதிகமான நிதியுடன், முதியோர் பராமரிப்புத் துறையில் 8,000 பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் 3,000 பேருக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதனிடையே, பினாங்கு மற்றும் சரவாக்கில் இரண்டு ஒருங்கிணைந்த பராமரிப்பு நிபுணத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன.

மேலும், முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான சேவை வரி 8-லிருந்து 6 விழுக்காடாகக் குறைக்கப்படுவதுடன், ஆண்டுக்கு RM96,000 வரையிலான பராமரிப்புக் கட்டணங்களுக்கு முழு வரிவிலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 திறன்மிக்க பராமரிப்பாளர்களை உருவாக்குவதே அமைச்சின் இலக்கு என்றும், இத்திட்டங்கள் பொது மக்களுக்கு தரமான பராமரிப்புச் சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்யும் எனவும் அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!