Latestமலேசியா

வெளிநாட்டினருக்கு RM500-க்கு போலி அனைத்துலக ஓட்டுநர் பெர்மிட்டுகள் விற்பனை – JPJ எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர்-9,மலேசியாவில் வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலித்து, அங்கீகரிக்கப்படாத அனைத்துலக ஓட்டுநர் பெர்மிட்டுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் எனக் கூறி, சில தரப்பினர் இந்தப் பெர்மிட்டுகளை விற்பனை செய்வதாகக் கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.

ஆனால், மலேசியாவில் சட்டப்பூர்வமாக வாகனங்களை ஓட்டுவதற்கான அங்கீகாரத்தை அந்த ஆவணங்கள் பெற்றிருக்கவில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

JPJ வழங்கும் அனைத்துலக ஓட்டுநர் பெர்மிட்டுகள் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் வெளிநாட்டினர் ஏமாற வேண்டாம் என ஹமிடி எச்சரித்தார்.

இதனிடையே, கோலாலம்பூரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான சிறப்புச் சோதனை நடவடிக்கையில், 121 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அவற்றில் 40 மோட்டார் சைக்கிள்கள், நான்கு கார்கள் மற்றும் மூன்று சரக்கு வாகனங்கள் என மொத்தம் 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், பல்வேறு சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்காக 273 சம்மன்கள் வழங்கப்பட்டதோடு, பாகிஸ்தான், மியான்மார், வங்காளதேசம், இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை வழங்கும் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என JPJ எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!