Latestஉலகம்

வைரலான ஜப்பான் குரங்கு ‘பன்ச்’க்கு 2,500-க்கும் மேற்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகள்

ஜப்பான், ஜூலை 28 – தாயால் கைவிடப்பட்டபோது ஒரு ‘ஓராங் ஊத்தான்’ (orangutan) பொம்மையை கட்டிப்பிடித்த வீடியோவால் உலகம் முழுவதும் வைரலான ஜப்பானிய குரங்கு ‘பன்ச்’ (Punch), தனது முதல் பிறந்தநாளை நேற்று முன்தினம் அதாவது ஜூலை 26 அன்று கொண்டாடியுள்ளது.

டோக்கியோ அருகிலுள்ள இச்சிகாவா (Ichikawa) நகர உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் பன்சுக்கு, ஜப்பான் மட்டுமின்றி பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் 2,500-க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் வந்துள்ளன.

தற்போது பன்ச், மற்ற குட்டி குரங்குகளுடன் பழகி, கூட்டத்தில் தனது இடத்தைப் பெற்றுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விலங்குகளையும் சமமாக பராமரிக்கும் கொள்கையால் தனிப்பட்ட பிறந்தநாள் விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, வந்துள்ள வாழ்த்து அட்டைகள் ஆகஸ்ட் 30 வரை பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!