Latestமலேசியா

ஹமாஸ் தலைவர் மீதான மலேசிய பிரதமரின் பதிவுகளை நீக்கியதற்கு மெட்டா மன்னிப்பு கோரியது

கோலாலம்பூர், ஆக 6 -ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ( Ismail Haniyeh ) கடந்த வாரம் கொல்லப்பட்டது தொடர்பான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த உள்ளடக்கம் நீக்கப்பட்டதற்கு Meta தளமான (META.O) மன்னிப்புக் கோரியுள்ளது. இஸ்மாயில் ஹனியே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் நீக்கப்பட்டதை அடுத்து Meta-விடம் மலேசியா விளக்கம் கேட்டிருந்தது. பிரதமரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த உள்ளடக்கம் அகற்றப்பட்டு, சரியான செய்தி மதிப்புள்ள லேபிளுடன் (Label) உள்ளடக்கம் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக Meta செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ்ஸிடம் ( Reuters) எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.

மலேசியா தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் திங்களன்று Meta பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டிருந்தனர். Meta -வின் செயல்கள் பாராபட்சமானது, அநீதியானது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக நசுக்குவதாகக் கருதுகிறது என்று பிரதமர் அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!