Latestமலேசியா

ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்

மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது.

குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46 வயது நண்பரைக் காண்பதற்காக, நேற்று மாலை 4 மணியளவில் அவர் சென்றபோது வீடு பூட்டியிருந்தது.

ஆனால் உள்ளேயிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்து  தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பல நாட்களுக்கு முன்பே உயிரிழந்த ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!