Latestமலேசியா

அனைத்துலக முதலீட்டு மோசடி ; இரு பிரிட்டன் ஆடவர்களுக்கு 6 மாத சிறை

ஷா ஆலாம், மார்ச் 16 – 6 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை உட்படுத்திய அனைத்துலக முதலீட்டு திட்ட மோசடியில் சம்பந்தப்பட்ட இரு பிரிட்டன் ஆடவர்களுக்கு, ஷா ஆலாம் Sesyen நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையை விதித்தது.

55 வயது Andrew Mark Peters, 51 வயது Darren Anthony Mcnicholas இருவரும் தங்களது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். அதை அடுத்து, அவர்கள் கைதான நாளான பிப்ரவரி 21- ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அவ்விருவரும் குறுகிய கால முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக அதிக லாபத்தை ஈட்ட முடியுமெனக் கூறி Scotland-ந்து நாட்டு ஆடவர் ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!