
விஸ்கோன்சின், டிசம்பர்-17, அமெரிக்காவின் விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர், மாணவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர்.
மேலும் அறுவர் காயமுற்றதாக உள்ளூர் போலீஸ் கூறியது.
கொலையாளியான 17 வயது பெண், பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டார்.
அப்பெண்ணும், அந்த கிறிஸ்துவப் பள்ளியின் மாணவி என தெரிவிக்கப்பட்டது.
9mm கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சித் தெரிவித்த அதிபர் ஜோ பைடன், அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றென வருணித்தார்.
சுடும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தை காங்கிரஸ் மேலும் கடுமையாக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இது, அமெரிக்காவில் இவ்வாண்டு கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட 490-வது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகும்.