Latestஉலகம்

அமெரிக்காவில், வெப்ப காற்று பலூன் நெடுஞ்சாலைக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது ; இருவர் காயம்

மினசோட்டா, மார்ச் 22 – அமெரிக்கா, மினசோட்டா மாநிலத்தில், வெப்ப காற்று பலூன் ஒன்று, நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளனதில் இருவர் காயமடைந்தனர்.

சம்பவத்தின் போது அந்த வெப்ப காற்று பலூனில் மூவர் பயணித்த வேளை ; அதில் இருவர் மட்டுமே காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பலத்த காற்றால், மின் கம்பத்தை நோக்கி சென்ற அந்த வெப்ப காற்று பலூனை, வயலில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அது பலனின்றி, பலூனை விட்டு அதன் கூடை பிரிந்து, ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

பலூன் விழுந்த இடத்தில் மூண்ட தீயை, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!