Latestஉலகம்

அயர்லாந்தில் 19ஆம் நூற்றாண்டு பிரம்மாண்ட கோட்டையை வாங்கிய மார்க் சக்கர்பெர்க்; மதிப்பு €30 மில்லியன்!

டப்ளின், ஆகஸ்ட்-22-​Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், அயர்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலக் கோட்டை ஒன்றை வாங்கியுள்ளார்.

​அவரும் அவரது மனைவி பிரிசில்லா சான் (Priscilla Chan) இருவரும், Blackwater நதிக்கரையில் அமைந்துள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Strancally கோட்டையையே வாங்கியுள்ளனர்.

​440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 3 அடுக்கு மாளிகை, 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது.

இதன் மதிப்பு சுமார் 23 முதல் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

​இந்த மாளிகை எவ்வளவு பிரம்மாண்டமானது என்றால், இதன் சமையலறையிலிருந்து சாப்பாட்டு அறைக்குச் செல்லவே சுமார் நான்கரை நிமிடங்கள் நடக்கும் தூரம் உள்ளதாம்.

​தவிர, இந்தக் கோட்டைக்கு அருகில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய கோட்டையின் இடிபாடுகளும், “கொலைக் குழி” (Murdering Hole) என்று அழைக்கப்படும் மர்மமான வரலாற்று பின்னணியும் உள்ளது.

​சக்கர்பெர்க் குடும்பத்தினர் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்தாலும், Dublin-னில் உள்ள Meta அனைத்துலக தலைமையகத்திற்கு வரும்போது ஓய்வெடுக்க இந்த பாரம்பரிய மாளிகையைப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!