
அய்ச்சி-நாகோயா, அக்டோபர்-3-ஜப்பானின், அய்ச்சி–நாகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா தனது 10-ஆவது தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது.
இதுவரை மலேசியா 9 தங்கப் பதக்கங்களை வென்று, நாட்டின் சிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையை சமன் செய்துள்ளது.
இதற்கு முன்பு, ஆக அதிகமாக 2010-ஆம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மலேசியா 9 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.
நேற்று மலேசியாவுக்கு மேலும் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
ஆடவர் கெய்ரின் சைக்கிளோட்டப் போட்டியில் டத்தோ அஸிசுல் ஹஸ்னி அவாங் தங்கம் வென்றார்.
அதேவேளை, ஆடவர் மற்றும் மகளிர் ஸ்குவாஷ் குழுப் போட்டிகளிலும் மலேசியா தங்கப் பதக்கங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆடவர் இரட்டையர் Padel இரட்டையர் இறுதிப் போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி இறுதியாட்டம் ஆகியவை மலேசியாவுக்கு 10-ஆவது தங்கத்தை வென்று புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை வழங்குகின்றன…



