Latestமலேசியா

ஆலயத்துக்குள் நுழைந்து, “India babi” என்ற வார்த்தையை பயன்படுத்திய முஸ்லிம் பெண் – உலு சிலாங்கூரில் பரபரப்பு

உலு சிலாங்கூர், மார்ச் 21 – செரண்டா, Kampung muhamad taib என்றழைக்கப்படும் Sri teratai ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த இந்திய முஸ்லிம் பெண் ஒருவர் India babi என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆலயத்தின் நேர் எதிரே உள்ள நிலத்தை அப்பெண்ணும் அவரின் கணவரான வங்காளதேச ஆடவரும் வாங்கியுள்ளனர்.

அந்நிலத்தில் வீட்டை தவிர வேறு எந்த மேம்பாட்டிற்கும் அனுமதி இல்லை. ஆனால், அவ்விருவரும் அங்கு bangla உணவகம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றனர்.

இதனால், ஆலயத்திற்கு பெரும் இடையூறுகள் ஏற்படுவதால், நிர்வாகத்தினர் அவர்களிடம் நல்ல முறையில் பேசியும் நிர்மாணிப்பு பணிகளை நிறுத்தவில்லை என ஆலயத்தின் செயலாளர் பாஸ்கரன் இரசன் கூறியுள்ளார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் புகாரளித்து பல முறை நடவடிக்கை எடுத்தும் அவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட வங்காளதேச ஆடவர் ஆலய நிர்வாகத்தினரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த சமயம் அவரின் மனைவி அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்து இந்தியர்களை கேவலமாக பேசியுள்ளார்.

இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளு முல்லில் முடிந்திருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பில், இரு தரப்பிலும் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட இருவரிடமும் போலீசார் வாக்கு மூலத்தை பதிவு செய்ததோடு,நேற்றிரவு திடிரென வங்காளதேச ஆடவரையும், பாஸ்கரனையும் போலீசார் கைது செய்து மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதாக ஆலயத்தின் துணைத்தலைவர் ராஜேஸ் கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாளை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மற்றும் நகராண்மைக் கழக அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வருகை புரியவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!