Latestமலேசியா

ஆவணங்களை சமர்ப்பிக்காததால் RoS நடவடிக்கை; MTUC-க்கு தற்காலிக கலைப்பு உத்தரவு

புத்ராஜெயா, மே-8-மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC மீது, சங்கப் பதிவிலாகா தற்காலிக கலைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

2020 முதல் 2025 வரையிலான கணக்காய்வு அறிக்கைகள், வரவு செலவுத் தகவல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான ஆவணங்களை பலமுறை கேட்டும் MUTC சமர்ப்பிக்கவில்லை என RoS தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 1966-ஆம் ஆண்டு சங்கச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக, 30 நாட்களுக்குள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய MTUC-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு வெற்றியடையாவிட்டால், இந்த தற்காலிக கலைப்பு நிரந்தரமாக மாறக்கூடும்.

1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MTUC, மலேசிய தொழிலாளர்களின் முக்கிய பிரதிநிதி அமைப்பாக இருந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!