கோலாலம்பூர், அக்டோபர்-28, சமூக ஊடகங்களுக்கான உரிமம் அடுத்தாண்டு கட்டாயமாக்கப்பட்டதும், பொருத்தமற்ற பதிவுகளை நீக்கத் தவறும் சமூக ஊடகங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவற்றின் மீது சட்ட நடவடிக்கைப் பாயலாம்.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறு கூறியுள்ளார்.
மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள Onsa எனப்படும் இணையப் பாதுகாப்புச் சட்ட மசோதாவில் அவ்விதி இடம் பெறும் என்றார் அவர்.
நடப்பில் எந்தவொரு விதிமீறலும், தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும்.
ஆனால் புதியச் சட்டம் இயற்றப்பட்டதும், விதிகளை மீறும் சமூக ஊடகங்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
எனினும் மேல் விவரங்களுக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்குமாறு ஃபாஹ்மி கேட்டுக் கொண்டார்.