Latestமலேசியா

இனியும் இப்படி நடக்கக் கூடாது: சர்ச்சைக்குரிய காலுறைகள் விவகாரத்தில் KK Mart-கு கடும் எச்சரிக்கை விடுத்த JAKIM

கோலாலம்பூர், மார்ச்-20 மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை JAKIM, அல்லாஹ் வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறை விற்பனை சர்ச்சை மீண்டும் நடக்கக்கூடாது என KK Mart சூப்பர் மார்க்கெட்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், அனைத்துத் தரப்பினரும் 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் தொட்டுப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அது கேட்டுக் கொண்டது.

KK Mart-டின் 3 கடைகளில் சர்ச்சைக்குரிய அக்காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது தொடர்பில், KK Mart நிறுவனர் Chai Kee Kan-னுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போது அவ்வெச்சரிக்கை விடப்பட்டதாக JAKIM தலைமை இயக்குநர் Hakimah Mohd Yusof சொன்னார்.

அவர்களும் தன்னிலை விளக்கம் அளித்ததோடு, அது போன்று மீண்டும் நடக்காதிருக்க மேற்கொள்ளவிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்ததாக Hakimah சொன்னார்.

அது தொடர்பான SOP நடைமுறைகளை மறு ஆய்வு செய்து புதுப்பிக்கவும் அந்நிறுவனம் ஒப்புக் கொண்டது.

JAKIM மற்றும் KK Mart நிறுவனரும் சந்திக்க தாம் தான் ஏற்பாடு செய்ததாக DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் முன்னதாக தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் சன்வேயில் 3 கடைகளில் அந்த காலுறைகள் வைக்கப்பட்டிருந்தது கடந்த வாரம் அம்பலமானது.

இதையடுத்து காலுறைகள் தருவித்த விநியோகிப்பாளருடனான ஒப்பந்தத்தை KK Mart உடனடியாக ரத்துச் செய்துச் செய்தது.

அந்த நினுவனமோ, சீனாவைச் சேர்ந்த நிறுவனம் தான் தங்களுக்குத் தவறுதலாக அவற்றை அனுப்பி விட்டதாக கூறிக் கொண்டது.

KK Mart அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோரியதுடன், தற்போது தனது அனைத்து கிளைக் கடைகளிலும் மன்னிப்பு வாசகத்தை மின்னியல் அறிவிப்பு பலகையில் பார்வைக்கும் வைத்துள்ளது.

ஆனால், KK Mart இத்தனை செய்தும் எதிர்மறையான பேச்சுகள் வலுவிழப்பது போல் தெரியவில்லை.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முஹமட் அக்மால் சாலே KK Mart-க்கு எதிரான புறக்கணிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த சினமூட்டும் நடவடிக்கை வேண்டாம் என முஸ்லீம் அல்லாத அமைச்சர்கள் சிலர் அக்மாலுக்கு அறிவுரை கூறினர்.

இந்த நிலையில் இவ்விவகாரம் வேறு மாதிரியாக திசை திரும்பாதிருக்க, அனைத்துத் தரப்பினரும் அமைதி காத்து, அதிகாரத் தரப்பிடமே அதனை விட்டு விட வேண்டும் என Hakimah வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!