Latestமலேசியா

இனி மலேசியர்கள் விசா இன்றி சீனாவுக்கு பயணிக்கலாம்

பெய்ஜிங், நவ 25 – இனி மலேசியர்கள் விசா இன்றி சீனாவுக்கு 15 நாட்கள் வரை பயணிக்க சீன அரசாங்கம் சலுகை அளித்துள்ளது.

எதிர்வரும் 2023 டிசம்பர் 1ஆம் திகதி முதல் 2024, நவம்பர் 30ஆம் திகதி வரை மலேசியா மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 15-நாள் விசா விலக்கு கொள்கையை சீனா அமல்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை இதர 5 நாடுகளாகும் என சீனா வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே சமூக பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, வணிகம், சுற்றுலா, நண்பர்கள் & குடும்ப உறவினர்களை பார்ப்பது மற்றும் பயணத்தின் இடைநிறுத்த நோக்கங்களுக்காக சீனாவிற்குள் நுழையும் மலேசியர்களுக்கு சீன அரசாங்கம் 15 நாள் விசா இல்லாத கொள்கையை அமுல்படுத்துகிறது.

அதே சமயத்தில் வேறு நோக்கங்களுக்காக செல்பவர்கள் மற்றும் 15 நாளுக்கு மேல் தங்க நினைக்கும் பயணிகள் விசாவைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!