Latestமலேசியா

இருதய அறுவை சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர்கள் விவகாரம்; ஏ.ஜி அலுவலகத்திற்கு செயல் திட்ட தீர்வு அனுப்பப்படும்

நிபுணத்துவ பட்டப் படிப்பு பயிற்சி திட்டம் அல்லது Parallel Pathway எனப்படும் திட்டத்தில் பயின்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர்கள் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான உத்தேச செயல்முறை திட்டம் ஒன்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Zambry Abdul Kadir தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவத் திட்டங்களை அங்கீகரிப்பது தொடர்பான பிரச்னைகளுக்கு சட்ட அம்சங்கள் தொடர்பிலும் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவத் திட்டங்களை அங்கீகரிப்பது தொடர்பான விவகாரங்களுக்கு 1971ஆம் ஆண்டின் மருத்துவச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் தேவை போன்ற சட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான தீர்வுகளை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. நாங்கள் அதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து, சட்ட விதிகளுக்கு உட்பட்ட விஷயங்கள் தொடர்பாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அடையாளம் கண்டுள்ளோம் என்று Zamry கூறினார். மலேசிய மருத்துவ மன்றம் (MMC) அனைத்துலக மாணவர்களை ஏற்றுக்கொள்வதைப் போலவே, இருதய நிபுணத்துவ துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற விரும்பும் பூமிபுத்ரா அல்லாத மருத்துவ அதிகாரிகளையும் அனுமதிக்குமாறு மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தை MMA எனப்படும் மலேசிய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து Parallel Pathway பிரச்னை ஒரு விவகாரமாக உருவெடுத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!