Latestமலேசியா

இவ்வாண்டு 68,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு; உற்பத்தி, சில்லறை வர்த்தகத் துறைகள் அதிகம் பாதிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-19-இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 16 வரை நாட்டில் மொத்தம் 68,177 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 15,196 அதிகமாகும் என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நாசிர் தெரிவித்தார்.

உற்பத்தித் துறை மற்றும் மொத்த-சில்லறை வர்த்தகத் துறை ஆகியவை வேலை இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) உயர்ந்துவரும் செயல்பாட்டுச் செலவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

​வேலை இழப்புகள் அதிகரித்திருந்தாலும், ஜூலை மாத நிலவரப்படி நாட்டின் வேலையின்மை விகிதம் 3% நிலையாக நீடிப்பதால் ஒட்டுமொத்த தொழில் சந்தையும் உறுதியுடன் உள்ளது.

​வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் (EIS) மற்றும் MYFutureJobs வழியாக 143,653 தொழிலாளர்கள் புதிய வேலைகளைப் பெற சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO உதவியுள்ளது.

​அதே சமயம், தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து, மலேசியாவை ஒரு நிலையான “World+1” முதலீட்டுத் தலமாக மாற்றுவதற்கும், குறிப்பாக semiconductor, விண்வெளி மற்றும் பசுமை ஆற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!