Latestமலேசியா

இஸ்கண்டார் புத்ரி roundabout-டில் sports கார் தடம் புரண்டு ஓட்டுநர் பலி, பயணி காயம்

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-3, ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் Nissan GTR ரக sports கார் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Kampung Sungai Melayu roundabout வளைவில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

41 வயது அந்த உள்ளூர் ஆடவர், சம்பவத்தின் போது Puteri Harbour-ரில் இருந்து Gelang Patah நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது roundabout வளைவில் கார் திடீரென தடம் புரண்டதில், தலையிலும் கால்களிலும் படுகாயம் அடைந்து அங்கேயே அவர் உயிரிழந்தார்.

உடன் இருந்த 36 வயது உள்ளூர் ஆடவர் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷ்னர் எம்.குமராசன் கூறினார்.

1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!