Latestமலேசியா

இஸ்ரேலியக் கப்பல்கள் மலேசியாவில் நங்கூரமிடக் கூடாது; துணைப் பிரதமர் உத்தரவு

ஜொகூர் பாரு, ஜூன்-4, இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட எந்தவொரு பன்னாட்டு கப்பலும் மலேசியாவில் எந்தவொரு துறைமுகத்திலும் நங்கூரமிடக் கூடாது.

போக்குவரத்து அமைச்சு அதனைக் கட்டாயம் உறுதிச் செய்ய வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ சாஹிட் ஹமிட் உத்தரவிட்டுள்ளார்.

மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் தூதரக உறவு இல்லையென்பதோடு, நேரடி வர்த்தக உறவுகளும் இல்லை.

எனவே, அவ்விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு இருக்காது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட ZIM கப்பல் நிறுவனத்தின் கொள்கலன்கள் ஜொகூர், இஸ்கண்டார் புத்ரி துறைமுகத்தில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரிக்குமாறும் சாஹிட் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலியப் பொருட்கள் மூன்றாம் தரப்பு மூலமாக மலேசியத் துறைமுகங்களுக்கு வந்திறங்குவதையும் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!