Latestமலேசியா

இஸ்ரேல் ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்த உள்நாட்டு தம்பதியர் கைது

கோலாலம்பூர், மார்ச் 30 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் கைது செய்யப்பட்ட இஸ்ரேல் ஆடவர் ஒருவருக்கு சுடும் ஆயுதங்களை விநியோகித்ததன் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

42 வயதுடைய அந்த ஆடவரும் 40 வயதுடைய அவரது மனைவியும் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறையின் அதிகாரிகளால் கோலாசிலாங்கூர் ரமலான் சந்தையில் நேற்றிரவு மணி 7.15அளவில் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கோலாசிலங்கூரிலுள்ள அவர்களது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடும் நடவடிக்கையில் அவர்களது காருக்கு பின்னால் இருந்த துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த இஸ்ரேல் ஆடவனுக்கு ஆறு ஆயுதங்கள் விநியோகித்ததாக நம்பப்படுகிறது. பிரான்ஸ் கடப்பிதழை பயன்படுத்தி அந்த இஸ்ரேல் ஆடவன் இம்மாத தொடக்கத்தில் நாட்டில் நுழைந்துள்ளான்.

இதனிடையே மேலும் விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்ட அந்த தம்பதியரை தடுத்து வைக்கும் நீதிமன்ற உத்தரவை போலீசார் இன்று பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 12 ஆம் தேதி அந்த இஸ்ரேலிய ஆடவன் இங்கு வந்தது முதல் அவனுக்கு கார் ஓட்டுனராக இருந்த உள்நாட்டு ஆடவர ஒருவரை இதற்கு முன்னதாக கேமரன் மலையில் போலீசார் கைது செய்தனர். ஆறு சுடும் ஆயுதங்கங்கள் மற்றும் 200 தோட்டாக்கள் வைத்திருந்தது தொடர்பில் 36 வயதுடைய இஸ்ரேலிய ஆடவன் கைது செய்யப்பட்டதாக நேற்று போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் உசேன் கூறியிருந்தார்.

குடும்ப பிரச்னை காரணமாக மற்றெரு இஸரேலிய நபரை தேடும் இலக்கை கொண்டிருப்பதாக அந்த ஆடவன் கூறியதாகவும் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.

மலேசியாவில் இருக்கும் வேளையில் பல்வேறு வகை துப்பாக்கிகளை இங்கு வாங்கியிருப்பதையும் அந்த ஆடவன் ஒப்புக்கொண்டுள்ளான் என்ற விவரங்களையும் ரஸாருதீன் உசேன் வெளியிட்டார்.

அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இதர முக்கிய பிரதமர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில் பாலஸ்தீனர்களுக்கு நாடு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதால் நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியிருப்பதாக நேற்று செய்தியாளர்களிடம் ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.

அந்த சந்தேகப் பேர்வழிக்கு இதர நோக்கம் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அந்த சந்தேகப் பேர்வழி இஸ்ரேல் ஏஜெண்டாக இருக்கக்கூடுமா என்பது குறித்தும் விசாரணையில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவன் தனி ஆளாக செயல்படவில்லை என்றும் போலீசார் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!