Latestமலேசியா

ஈப்போவில் பிரம்மாண்ட சங்கமம்: மலேசிய கலாச்சார விழாவுடன் இணையும் ‘Colors of India’ மெகா ஷாப்பிங் & உணவுத் திருவிழா

ஈப்போ, ஜூன்-17 – பேராக் மாநில மக்களே, உங்கள் ஈப்போ நகரில் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுவையான உணவுகளின் பிரம்மாண்ட சங்கமம் அரங்கேறவிருக்கிறது.

​மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் (MOTAC) ஆதரவோடு, ‘Festival Budaya Malaysia @ Perak 2026 மற்றும் ‘Colours of India’ இணைந்து நடத்தும் இந்த மெகா திருவிழா, வரும் ஜூன் 25 முதல் 28 வரை, ஈப்போ, Bulatan Sultan Azlan Shah-வில் நடைபெறவுள்ளது.

​காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் இவ்விழாவின் முக்கிய ஈர்ப்புகளாக, ‘BIGG India Shopping Festival’ மற்றும் ‘Foodie Macha Viral Food Festival’ ஆகியவை அமையவுள்ளன.

பாரம்பரிய ஆடைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் நாவூறும் வைரல் உணவுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அணிவகுக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஆதித் தமிழன் விழா எனும் தலைப்பில் இந்திய பாரம்பரிய நடனப் போட்டி, Fun Run ஓட்டம், Hot Air Balloon மற்றும் குடும்பத்திற்கான பல சுவாரசியமான பொழுதுபோக்குகளும் காத்திருக்கின்றன.

​வியாபாரிகளே, உங்கள் வணிகத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல இதுவொரு பொன்னான வாய்ப்பு..

மேல் விபரங்களுக்கு ‘Colours of India’ சமூக ஊடகப் பக்கங்களை நாடுங்கள் அல்லது 019-450 0033 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அனைவரும் வாரீர்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!