
ஈப்போ, செப்டம்பர்-19-ஈப்போ வடக்கு-ஈப்போ தெற்கு விரைவுச் சாலையில் மேரு – பெர்ச்சாம் இடையே இன்று அதிகாலை 15 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 3 மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்.
மேருவிலிருந்து தம்புன் (Tambun) நோக்கிச் சென்ற 12 மோட்டார் சைக்கிள்களும் 3 கார்களும் இந்த விபத்தில் சிக்கியதாக ஈப்போ மாவட்டப் போலீஸ் கூறியது.
அதிகாலை 3.35 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 19 மற்றும் 20 வயதிலான இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; படு காயமடைந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
19 முதல் 25 வயதுக்குட்பட்ட மேலும் 9 மோட்டார் சைக்கிளோட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காரோட்டிகள் மூவரும் காயமின்றித் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.



