Latestஅமெரிக்காஉலகம்

ஈரானின் பதிலை நிராகரித்தார் ட்ரம்ப்; “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என சமூக வலைத் தளத்தில் விளாசல்

வாஷிங்டன், மே-11-ஈரானுடனான 10 வார கால போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா விடுத்த அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

​நேற்று ஈரானியப் பிரதிநிதிகள் பாகிஸ்தான் மூலமாக வழங்கிய பதில் கடிதத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடகத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் பதில் ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றார் அவர்.

​Hormuz நீரிணையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்வழி முற்றுகையை நீக்க வேண்டும் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்பதால் இந்த மோதல் வலுத்துள்ளது.

​இந்த முட்டுக்கட்டை காரணமாக அனைத்துலக சந்தையில் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஈரானின் புதிய தலைமைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர், முழு அளவிலான வட்டாரப் போராக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!