
வாஷிங்டன், செப்டம்பர்-23,அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதா அல்லது அந்நாட்டுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து தாம் முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஈரான் மீண்டும் தன்னை கட்டியெழுப்ப அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது ஒரு வாய்ப்பு எனக் கூறினார்.
அதே சமயம், ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
எனினும், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க மத்திய தவணைத் தேர்தலுக்குப் பின்னர் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படும் என தாம் நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
தமது உரையில் ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஈரான் தொடர்பான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் பேசத் தொடங்கியபோது, ஈரானிய பிரதிநிதிகள் பலர் அவையிலிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



