
வாஷிங்டன், மே-30-ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டம், இறுதி முடிவு ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது.
ஈரானுடனான 60-நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பது மற்றும் மூடப்பட்டுள்ள Hormuz நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான தற்காலிக ஒப்பந்தத்தை இறுதிச் செய்ய, ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் 2 மணி நேர அவசர ஆலோசனையை மேற்கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்றும், Hormuz நீரிணையில் எவ்வித கட்டணமுமின்றி கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஆனால், ட்ரம்பின் இந்த அணுஆயுதக் கூட்டு நடவடிக்கை தொடர்பான கருத்துகள் முற்றிலும் அடிப்படையற்றவை என ஈரான் மறுத்துள்ளது.
இரு நாடுகளும் தற்காலிக ஒப்பந்தத்தை எட்ட நெருங்கி வந்தாலும், முக்கிய நிபந்தனைகளில் இறுதி முடிவு எட்டப்படாததால் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகியுள்ளது.



