Latestமலேசியா

உங்கள் கனவு இல்லத்திற்கான புதிய முகவரி – நீலாயில் ‘எஹ்சான் விடூரி’ வீடமைப்புத் திட்டம்; முன்பதிவுக்கு இன்றே அழையுங்கள்

சொத்துத் துறையில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எசான் நிறுவனக் குழுமம் (Ehsan Group of Companies), தனது புதிய ‘எஹ்சான் விடூரி’ (Ehsan Widuri) Freehold சர்வீஸ் அபார்ட்மென்ட் திட்டத்தை பண்டார் பாரு நீலாயில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் சொத்து மேம்பாட்டுத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் இந்நிறுவனம், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், ஜோகூர், கெடா மற்றும் மலாக்கா உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 7,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி முடித்துள்ளது.

தரமான குடியிருப்புகளை உருவாக்குவதுடன், வசதி, செயல்பாடு மற்றும் நீண்டகால மதிப்பை கருத்தில் கொண்ட திட்டங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிலையான வளர்ச்சி, திட்டமிட்ட மேம்பாடு மற்றும் புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டே திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

எசான் குழுமத்தின் கீழ் செயல்படும் Ehsan Bumi Sejahtera Sdn. Bhd. நிறுவனத்தால் மேம்படுத்தப்படும் ‘எஹ்சான் விடூரி’ திட்டம், தலா 30 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களில் மொத்தம் 488 குடியிருப்பு யூனிட்களை உள்ளடக்கியுள்ளது.

இதில் பல்வகையான வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹமிட் விளக்கினார்.

குடியிருப்பாளர்களின் வசதிக்காக நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், யோகா அறை, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் உள்ளிட்ட மொத்தம் 30 நவீன வசதிகள் இத்திட்டத்தில் இடம்பெறவுள்ளன.

மேலும், குடியிருப்பைச் சுற்றிய பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வசதிகளும் அமைந்துள்ளன.

KLIA சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான போக்குவரத்து அணுகலும் எளிதாக இருப்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், Freehold உரிமையுடன் சிறந்த இடவசதியில் அமைந்துள்ள ‘எஹ்சான் விடூரி’ திட்டத்தில் இந்திய சமூகத்தினரும் வீடுகளை வாங்க முன்வர வேண்டும் என நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

சொந்த வீடு வாங்குதல், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சொத்தை உருவாக்குதல் அல்லது நீண்டகால முதலீடு மேற்கொள்ளுதல் போன்ற நோக்கங்களுக்காக இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாம் என அப்துல் ஹமிட் கூறினார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 விழுக்காடு வரையிலான முதலீட்டு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘Zero Entry Cost’ சலுகையுடன், சட்டக் கட்டணங்களையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் சிறப்புத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

நிலாயின் வளர்ந்து வரும் சொத்துச் சந்தை, முக்கிய இடங்களுக்கான எளிய போக்குவரத்து வசதி மற்றும் Freehold உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘எஹ்சான் விடூரி’, முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் மட்டுமின்றி நீண்டகால சொத்து முதலீட்டை எதிர்பார்ப்பவர்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பாக அமையும் என எசான் குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!