Latestமலேசியா

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்னையில் தேசிய சராசரி விகிதத்தை மிஞ்சிய புத்ராஜெயா மக்கள்

புத்ராஜெயா, மார்ச்-6, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையில், புத்ரா ஜெயா மக்கள், தேசிய சராசரி விகிதத்தையே மிஞ்சியிருக்கின்றனர்.

அதோடு உடற்பயிற்சிகளிலும் அவர்கள் பின் தங்கியிருப்பதாக, சுகாதார அமைச்சின் ஆய்வை மேற்கோள் காட்டி கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாப்பா தெரிவித்தார்.

கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் வசிப்பவர்களிடையே மனச்சோர்வும், பதட்டமும் அதிகம் காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இது உண்மையில் மிகவும் கவலையளிக்கிறது; இதனைக் களைய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உள்ள விளையாட்டு அமைப்புகளுக்கு மடானி உதவியை ஒப்படைத்த போது அமைச்சர் கூறினார்.

இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட, விளையாட்டு ஒரு முக்கிய அம்சம் எனக் குறிப்பிட்ட Dr சாலிஹா, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்கும் முகவர்களாக விளையாட்டு அமைப்புகள் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆரோக்கியமான – சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தூண்டக் கூடிய விளையாட்டுத் திட்டங்களை அவை அதிகம் செயல்படுத்தி ஆதரிக்கவும் வேண்டும் என்றார் அவர்.

ஆரோக்கியமான நகரை உருவாக்க அரசாங்கமும் தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!