
புத்ராஜெயா, மே 25 – புத்ராஜெயா மாநகராட்சி (PPj) நிர்வகிக்கும் உணவக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் இயங்கும் சிறு வியாபாரிகளுக்கு 30 விழுக்காடு வாடகை குறைப்பு வழங்கப்படவுள்ளது.
கூட்டரசு பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா இயோ கூறுகையில், இந்தச் சலுகை 2026 ஜூன் 1, முதல் 2027 மே 30, வரை அமலில் இருக்கும் என்றும், இதன் மூலம் 244 சிறு வியாபாரிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் சிறு வியாபாரிகளின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வியாபாரிகள் மே 2026 வரையிலான நிலுவை வாடகையை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், புத்ராஜெயா பிரிசின்க்ட் 9 உணவக வளாக வியாபாரிகள், மூத்த குடிமக்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு வரை உணவுத் தள்ளுபடி வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.



