உலகக் கிண்ணத் தொடக்கம்: தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி

மெக்சிகோ சிட்டி, ஜூன்-12-உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
புகழ்பெற்ற Estadio Azteca அரங்கில் 80,000-க்கும் அதிகமான இரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆட்டம், உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிக பரபரப்பான தொடக்க ஆட்டமாகப் பதிவாகியுள்ளது.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே மெக்சிகோவின் ஜூலியன் குய்னோன்ஸ் (Julián Quiñones) முதல் கோலை அடித்து அசத்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியில், தென் ஆப்பிரிக்க வீரர்களான யாயா சித்தோல் (Yaya Sithole) மற்றும் (Themba Zwane) ஆகிய இருவர் அடுத்தடுத்து சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட மெக்சிகோவின் ரவுல் ஜிமினெஸ் (Raúl Jiménez) 67-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மெக்சிகோ கேப்டன் சிசர் மான்டெஸும் (César Montes) சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், இந்தத் தொடக்க ஆட்டம் மொத்தம் 3 சிவப்பு அட்டைகளுடன் புதிய உலகக் கிண்ண சாதனையைப் படைத்துள்ளது.



