உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரதமர்; சிங்கப்பூரின் லாரன்ஸ் வோங்கிற்கு S$14 லட்சம் ஊதிய உயர்வு

ஆண்டுக்கு 36 லட்சம் சிங்கப்பூர் டாலர்—அதாவது மலேசிய மதிப்பில் சுமார் RM11 மில்லியனுக்கும் அதிகமான தொகை! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கான புதிய சம்பள அளவுகோல் இதுதான்.
அரசியல் தலைவர்களின் சம்பளக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ள சிங்கப்பூர், பிரதமருக்கான ஆண்டு சம்பள அளவுகோலை 22 லட்சம் சிங்கப்பூர் டாலரிலிருந்து 36 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளது. இது 60 விழுக்காட்டுக்கும் அதிகமான உயர்வாகும்.
துணைப் பிரதமருக்கு ஆண்டுக்கு 30.6 லட்சம் டாலரும், அமைச்சர்களுக்கு அவர்களின் பதவி மற்றும் பொறுப்புக்கு ஏற்ப 18 லட்சம் முதல் 28.8 லட்சம் டாலர் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு இந்தப் புதிய சம்பளம் உடனடியாக வழங்கப்படாது. அக்டோபர் 15 முதல் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அதிகபட்சம் 9 விழுக்காடு வரை ஒருமுறை சம்பளச் சீரமைப்பு வழங்கப்படும்.
தனக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளத்தைப் பதவிக்காலம் முழுவதும் சமூக நல நோக்கங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக வோங் அறிவித்துள்ளார்.
திறமையான தலைவர்களை அரசியலுக்கு ஈர்க்கவும் நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் உயர்ந்த சம்பளம் அவசியம் என சிங்கப்பூர் வாதிடுகிறது.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இந்தத் தொகை, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவரும் நேரத்தில் இச்சம்பள உயர்வு அந்நாட்டில் கலவையான வினர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



