Latestமலேசியா

உலு லங்காட்டில் போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநரால் பரிதாபமாக பலியான 3 வயது குழந்தை மற்றும் பெற்றோர்

காஜாங், ஜூலை-30-சிலாங்கூர், உலு லங்காட் அருகே போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் வாகனமோட்டிய நபரால் ஏற்பட்ட கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று காலை மணி 7 மணிக்கு மேல் உலு லங்காட், ஜாலான் பத்து 17-ல் இச்சம்பவம் நிகழ்ந்தது.

​34 வயதுடைய மெக்கானிக், அவரது 32 வயது மனைவி மற்றும் 3 வயது ஆண் குழந்தை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த Perodua Aruz இரக சொகுசு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

​மோதிய வேகத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காஜாங் மாவட்டப் போலீஸ் கூறியது.

விபத்தை ஏற்படுத்திய 42 வயது வாகனமோட்டியைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

​அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் Methamphetamine எனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு இரு போதைப்பொருள் குற்றப் பின்னணிகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!