
கோலாலாம்பூர், ஏப்ரல்-30-நாட்டின் முதல் நிலை மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியா, அதன் அடுத்த மைல் கல் சாதனையாக, OTT தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Vanakkam Maxx’ என்றப் பெயரில் உங்களின் புதிய OTT உலகமாக இது இனி வலம் வரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை, பழையதிலிருந்து புதியது வரை, trending முதல் பாரம்பரியம் வரை என அனைத்து வகை தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒரே இடத்தில் இது உங்களுக்குக் கொண்டு வருகிறது.
இவை அனைத்தும் RM9.90 என்ற குறைந்த விலையிலான மாதச் சந்தா மற்றும் RM99 ஆண்டு சந்தாவில் உங்களுக்கு நிறைந்த அனுபவத்தைத் தரும்.
App Store அல்லது Google Play Store-ரில் Vanakkam Maxx தளத்தை இப்போதே பதிவிறக்கம் செய்பவர்களுக்கு, அறிமுகச் சலுகையாக 200-க்கும் மேற்பட்ட தகவல்-பொழுதுபோக்கு அம்சங்கள் 2 மாதங்களுக்கு இலவச சந்தாவுடன் வழங்கப்படுகின்றன.
ஒரு முறை பார்த்தால் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவுக்கு உங்கள் பொழுதுபோக்கின் புதிய முகவரியாக இது திகழுவுள்ளது.
மின்னியல் ஊடகத்திலிருந்து Vanakkam Maxx OTT தளம் வரை வணக்கம் மலேசியாவின் விரிவாக்கத்தையும் வளர்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது.
இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள், புதிய OTT அனுபவத்தை அனுபவியுங்கள்.



