Latestமலேசியா

எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை

இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் வேலை மற்றும் அரசாங்க எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் 50 விழுக்காடு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய நியமிப்பது ஆகியவை முக்கிய நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும்.

எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 392 ரிங்கிட்வரை வரை உயர்ந்தது. வளைகுடா வட்டாரத்தில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை நாடு சார்ந்திருப்பதைத் தொடர்ந்து, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ( Shebaz Sharif ) எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை அறிவித்தார்.

வட்டார சூழ்நிலை மற்றும் போர் ஆகியவை இவ்வளவு காலமாக நாம் பாடுபட்டு வரும் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதிக்கின்றன.

ஆனால் மக்கள் மீது நேரடி சுமையைத் தவிர்க்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று ( Shebaz Sharif ) தெரிவித்தார். அரசாங்க செலவினங்களும் 20 விழுக்காடு குறைக்கப்படும்.

அதே நேரத்தில் அரசாங்க வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50 விழுக்காடு குறைக்கப்படும். உலகளாவிய சந்தை விலைகளில் கூர்மையான அதிகரிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசாங்கம் எரிபொருள் விலையை 55 ரூபாய் உயர்த்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!