
குவா மூசாங், மே 18 – பள்ளியில் மாணவிகளை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 60 வயது முதியவர் ஒருவர் 7 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் கணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பள்ளி மாணவிகள் கழிவறை பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் ஆடவர் ஒருவர் வெளியே வந்ததை மாணவிகள் கவனித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே மாத தொடக்கத்தில் அதே நபர் பள்ளி ‘சூராவ்’ (surau) பகுதியில் KAFA வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் அடிக்கடி காணப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



